Posted : Sep - 02 - 2010 @ : 1:43 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
நேற்று இடம்பெற்ற Apple இன் செய்தியாளர் மாநாட்டில், புதிதாக iTunes 10 மற்றும் Ping என்ற இசைப்பிரியர்களுக்கான சமூக வலைப்பின்னல் என்பன உருவாக்கப்பட்ட போதிலும், அங்கு எண்கள் பற்றிய தரவுகள் முதன்மை பெற்றது எனலாம். அண்மையில் Google ஆனது, தாங்கள் நாளாந்தம் 200,000 Android தொலைபேசிகளை Activate செய்வதாக அறிவித்தது. அதேவேளை, Apple நாளாந்தம் 230,000 iPhone களை Activate செய்வதாக அறிவித்துள்ளது. இதுவரையிலும், Apple AppStore இலிருந்து 6.5 பில்லியன் Apps பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, 275 மில்லியன் iPod களை இதுவரையில் Apple விற்பனை செய்திருக்கிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Ping சேவை, 160 மில்லியன் பயனர்கள் இணைந்த நிலையிலேயே தொடங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது iTunes இலிருந்து 100 மில்லியன் தடைவை திரைப்படங்களும், 450 மில்லியன் தடைவை தொலைக்காட்சித் தொடர்களும், 35 மில்லியன் தடைவை புத்தகங்களும், 11.7 பில்லியன் தடைவை பாடல்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
Posted : Jun - 08 - 2010 @ : 6:18 pm | Filled under:
சாதனங்கள் |
No comments
அப்பிள் கணினி நிறுவனம், நிகரற்ற தொழில்நுட்ப நிலைகளை வெளியிடுவதில் ஜாம்பவான்கள், அண்மையில் அனைவரும் எதிர்பார்த்திருந்த வகையில் ஐபோனின் 4 வது தலைமுறை வடிவமைப்பை வெளியிட்டது. அப்பிள் நிறுவனத்தின் உலகின் பல பாகங்களிலிருந்தும் கூடிய மென்பொருள் வல்லுனர்களின் மாநாட்டில் அப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜொப்ஸ் அவருக்கே உரித்தான தனித்துவமான நிலையில் ஐபோன் 4 ஐ வெளியிட்டு வைத்தார்.
Posted : Jul - 11 - 2008 @ : 5:21 am | Filled under:
சிறப்பானவை |
No comments
தொழில்நுட்ப வளர்ச்சியின் வியாபிப்பு மிக வேகமாகவே இடம்பெற்று வருகின்றதை எம்மால் நிறையவே அவதானிக்க முடிகிறது. வளர்ச்சி காணும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சாத்தியங்கள் ஒன்றா, இரண்டா… இல்லேயே ஆயிரமாயிரம். இந்த தொழில்நுட்hத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியுள்ள இன்னொரு புதுமையான தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையே இக்கட்டுரை ஆராயப்போகிறது.