நுட்பத் துணுக்கு

Google Chrome இற்கு வயது இரண்டு

மிகக்குறுகிய காலத்தில் அதிகளவில் பிரபல்யமான இணைய உலாவியாக Google Chrome ஐ கண்டு கொள்ள முடியும். இன்றோடு, Google Chrome வெளியாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. எளிமையான வகையில் பாதுகாப்பான வகையில் மிகவும் வேகமாக இணைய உலாவலைச் சாத்தியமாக்கும் தன்மையை Google Chrome கொண்டிருப்பதே அதிகளவில் பிரசித்தமடையக் காரணமெனலாம். Windows, Mac, Linux ஆகிய எல்லா பணிசெயல் முறைகளிலிலும் மிகவும் வேகமாக இயங்கக்கூடியது. இப்போது இது Flash ஐ கொண்ட நிலையிலேயே கிடைக்கப்பெறுகிறது. HTML5 இன் உயரிய விடயங்களை சாத்தியமாக்கும் தன்மைகளையும் இது கொண்டிருப்பது சுவை. இதில் பயன்படுத்தக்கூடிய வகையில், 6000 இற்கும் மேற்பட்ட பயனுள்ள நீட்டிப்புகளும் கிடைக்கப்பெறுகிறது.

மேலும் அறிய...

செய்நிரல்

Google Chrome உலாவியுடனேயே Flash வருகிறது

கூகிள் தனது இணைய உலாவியான Google Chrome உடன் Adobe இன் Flash player ஐயும் இணைத்து உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. புதிய Google Chrome பதிப்புகள் யாவும் Flash ஐக் கொண்ட நிலையிலேயே வெளியிடப்படும் எனத் தெரிய வருகிறது. இதன் காரணமாக, Flash plug-in ஐ வேறாக பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டுமென்கின்ற தலையிடி போகிறது.

மேலும் அறிய...


நுட்பம் மடலை உங்கள் மின்னஞ்சலில் பெறலாம்

பிரதி செய்வாய் தோறும், அறிவியல், நுட்பம் என அனைத்தும் பற்றிய அழகிய மடலொன்றை நீங்கள் பெறலாம். முற்றிலும் இலவசமாக, உங்கள் மின்னஞ்சலில்.