Posted : Sep - 05 - 2010 @ : 10:45 pm | Filled under:
தொழில்நுட்பம்,
நுட்பத் துணுக்குகள் |
No comments
எதிர்காலத்தில் வரவிருக்கும் கம்பியில்லா (wireless) தொழில்நுட்பமானது, 5 நிமிட வீடியோவொன்றை வெறும் ஒருசில செக்கன்களில் பார்க்க தயார்நிலைக்கு கொண்டு வரும் சாத்தியமுடையதென அந்த தொழில்நுட்பத்தை பிரசித்தம் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தளவான வீடியோவொன்றை காண்பதற்கான தயார் நிலை, இன்றைய கால தொழில்நுட்பத்தில் சில நிமிடங்களிலேயே எய்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய தொழில்நுட்ப வருவிளைவுகள் அமெரிக்காவின் பல இடங்களில் இப்போது, பரீட்சாத்தமாக பாவனைக்கு விடப்பட்டுள்ளது. சாதாரணமாக, 3G தொழில்நுட்பத்தில் தரவுகள் 1 தொடக்கம் 2 Mbps (megabits per second) வேகத்திலேயே பரிமாறப்படும். ஆனால், இந்த வருடம் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பரிசோதிக்கப்பட்ட 4G தொழில்நுட்பத்தின் வேகமானது, 20 தொடக்கம் 70 Mbps இல் இருந்ததாக Clearwire தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவிக்கிறது. எது எப்படியோ, எதிர்காலத்தின் தொழில்நுட்பங்கள் வேகமாகவிருக்கும் என்பது வெளிப்படை.
Posted : Jul - 04 - 2010 @ : 12:15 am | Filled under:
சாதனங்கள் |
2 comments
Microsoft கணினி நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்ட KIN தொலைபேசி உரிய இலாபம் ஈட்டததால், இதன் உற்பத்தியையும், விற்பனையையும் நிறுத்தப் போவதாக 01/07/2010 அன்று அறிவித்துள்ளது. Kin கையடக்கத் தொலைபேசி இந்த வருட இறுதியில் ஐரோப்பிய கண்டத்தில் வெளிவருவதாக இருந்தது. ஆனாலும் Microsoft நிறுவனத்தின் இந்த புதிய முடிவால் ஐரோப்பிய Windows ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தவிர வேறொன்றும் இல்லை. இந்த ஏமாற்றத்தை ஈடு செய்வதற்கு இதன் புதிய பரிமாணமான Windows 7 தொலைபேசி உற்பத்தியை Microsoft தொடங்கவுள்ளது.
Posted : Mar - 31 - 2010 @ : 3:47 pm | Filled under:
சாதனங்கள்,
சிறப்பானவை |
1 comment
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடைவுகள் எமது வாழ்வியல் கோலங்களை மாற்றியுள்ளனவா? இன்றைய நிலையில் கையடக்கத் தொலைபேசியும் கணினியும் ஒவ்வொரு தனிநபரிடமும் இருக்க வேண்டிய கட்டாய சாதனங்களாக மாறிவிட்டன. இந்தச் சாதனங்களைப் பாவிப்பவர்களின் தொகை மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.