By: Kevin Jarrett

இணையம்,சாதனம்,சிறப்பானவை,தொழில்நுட்பம்

Chrome OS & Web Store: நீங்கள் அறிய வேண்டியவைகள்

12 Dec , 2010   தாரிக் அஸீஸ்  

அண்மையில் Google தனது Chrome Web Store ஐ உலகலளவில் அறிமுகம் செய்து வைத்தது. இதன் முழு நோக்கமும் Apple இன் Apps Store கையடக்கத் தொலைபேசிகளில் புரட்சி செய்தது போன்று, Chrome browser இல் ஆக்கபூர்வமான நிலைகளை ஏற்படுத்துவது ஆகும். இந்த Web Store இல் தேவையான இணைய செய்நிரலைகளைத் தேடி, நிறுவிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வோடு சேர்ந்தாற் போல், இணைய உலாவியை மையமாகக் கொண்ட நிலையில் இயங்கும் Chrome OS பணிசெயல் முறையைக் கொண்ட புதிய Netbook அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்தோடு, இந்த Web Store என்பது Chrome இன் ஒரு பகுதியாகும். Chrome apps ஆக இனங்காணப்பட்டு நிறுவப்படக்கூடிய செய்நிரல்கள் ஏனைய இணைய உலாவிகளிலும் செயற்படக்கூடியது. ஏனெனில், அவை பெரும்பாலும் இணையத்தளம் சார்ந்த செய்நிரல்கள். ஆனால், நீங்கள் Apps ஐ extensions ஆக இனங்கண்டு கொள்ளக்கூடாது. Extensions எனப்படுபவவை Chrome browser இற்கே உரித்தான add-ons ஆகும்.

இன்னும் குழப்பமாக இருக்கிறதா?

உண்மையில், Google இன் இலட்சியமான, எதிர்காலத்தை நோக்கியதான திட்டங்களை சாதாரண கணினி பயனர்களுக்கு அவ்வளவு இலகுவில் விளங்கப்படுத்திவிட முடியாது. அதனாலேயே, Google இன் இலட்சியக் கனவுகளின் ஆதாரத்தை உலகம் புரிந்து கொள்ள காலம் செல்லும்.

Google இன் பாரிய திட்டம்

Google இன் திட்டம் தான் என்ன? எதிர்காலத்தில் எமக்கு தேவையானது வெறும் இணைய உலாவி (Web Browser) மட்டுந்தான், வேறு எதுவுமல்ல என Google நினைக்கிறது. இணைய நிலை சார்பாக மக்கள் தங்கள் நேரங்களைக் செலவழிக்கும் போது, சம்பிரதாய பணிசெயல் முறைகளான Windows, Mac OS போன்றவற்றிற்கான தேவை இழிவளவாக்கப்பட்டுவிடும். கணினிகள் மிக வேகமாக செயற்பட்டு, உடனடியாக இணைய உலாவியின் இடைமுகத்தை பயனருக்கு வழங்க வேண்டுமென்பதே Google இன் திட்டம். இந்த நிலையானது, Google இன் எளிமையான Chrome OS இனால் சாத்தியமாக்கப்பட்டுள்ளது என்பது இனிய செய்தி.

இணைய நிலை சார்ந்த செய்நிரல்கள் கொண்ட இந்தப் புதிய உலகில், சம்பிரதாய செய்நிரல்கள் இணைய நிலைச் செய்நிரல்களால் பிரதியிடப்பட்டுள்ளதோடு, உங்களின் அத்தனை கோப்புகள், தகவல்கள் என எல்லாமே குறித்த கணினியில் சேமிக்கப்படாமல், இணையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்காகத்தான், இந்த Chrome Web Store வெளியிடப்பட்டது.

Chrome இன் எதிர்காலத் திட்டங்களை எதிர்வுகூறவோ, விளக்கிச் சொல்லவோ மிகவும் கடினமாகும், ஏனெனில், Google இன் நடவடிக்கைகள் புதுமைகள் தரவல்ல நிலையில், இருப்பது சுவை. ஆனாலும், Chrome browser அண்மைக் காலமாக மிகப் பெரிதளவில் பிரபல்யமடைந்து வருவதோடு, 10 சதவீதமான சந்தைப் பங்குகளைத் தன்னகம் கொண்டுள்ளது. அத்தோடு, புதிய Chrome OS கொண்ட Netbook களை Google தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரிடையே பரீட்சார்த்த நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தோடு, Pilot program மூலமாக பயனர்களின் கருத்துக்களும் சேர்த்து Chrome OS ஐ Google வளப்படுத்திக் கொள்ள எண்ணியுள்ளது.

இதேவேளை, Chrome OS ஐக் கொண்ட நிலையில் அமைந்த Netbook கள், அடுத்தவருடம் நடுப்பகுதியில் சந்தைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chrome OS இற்கான அறிமுக காணொளியை அண்மையில், Google வெளியிட்டது. இந்தக் காணொளியில், தீர்க்கப்பட வேண்டிய சமன்பாடொன்றையும் Google இணைத்திருந்தது. அதனைத் தீர்த்தவருக்கு Chrome OS கொண்ட Netbook உம் வழங்கப்பட்டது. அது பற்றிய செய்தியை Google Chrome இன் வலைப்பதிவில் காணலாம்.

குறித்த காணொளி இதோ:

எதிர்காலம் பற்றிய Google இன் பாதை மிகவும் முன்னேற்றகரமானது.

இதேவேளை, புதுநுட்பம் தளத்திற்கான இணைய செய்நிரலும், Chrome Web Store இல் இணைக்கப்பட்டுள்ளது. அதனை நீங்கள் இங்கு சென்று உங்கள் Chrome இணைய உலாவியில் நிறுவிக் கொள்ள முடியும்.

 

பகிர்தல் பலன் தரும்Share on Facebook0Tweet about this on Twitter0Share on Google+0Email this to someone


பிரதி செவ்வாய் தோறும் நுட்பம் மடல் வெளியாகிறது.

நாம் உங்களுக்கு எந்த எரிதமும் அனுப்பமாட்டோம். உறுதியாக.