tumblr_n8le5sAziL1tcjz2ao1_400

கணிதம்

பேசியர் வளைவு

22 Jul , 2014   தாரிக் அஸீஸ்  

கணினி வரைகலையிலும் அதனையொத்த ஏனைய வரைநிலைச் செயலிகளும் கணித அடிப்படையில் உருவாக்கப்பட்ட வளைவே, பேசியர் வளைவு (Bézier curve) எனப்படுகிறது.

இந்த வளைவானது, நான்கு முனைவுகளால் அடையாளப்படுத்தப்படுகிறது: முதன்மையான இடம் மற்றும் முடியுமிடம். இந்த இரண்டு முனைகளும் நங்கூரங்கள் (Anchors) என வழங்கப்படும். ஏனைய இரண்டு வேறான மத்திய முனைகளும் கைப்பிடி (Handles) என வழங்கப்படும். இந்தக் கைப்பிடிகளின் உதவியின் மூலமாகவே, பேசியர் வளைவின் வடிவம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.

tumblr_n8le5sAziL1tcjz2ao2_400

1960களில், பியர்ரே பேசியர் (Pierre Bézier) என்ற பொறியியலாளர், ரெனோல்ட் நிறுவனத்திற்கு மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்கின்ற நிலையின் தேவைக்காகவே, இந்தக் கணித நிலை சார்ந்த வளைவுகள் கொண்ட வரைபு நிலையை உருவாக்கி அறிமுகப்படுத்தினார்.

இந்த பேசியர் வளைவு பற்றி தெளிவும், அதனைச் சரளமாகக் கையாளுகின்ற தகவும் வாய்க்கின்ற போது, கணினியைக் கொண்டு நேர்த்தியான வரைதல்களை மேற்கொள்ள முடியும்.

பகிர்தல் பலன் தரும்Share on Facebook0Tweet about this on Twitter0Share on Google+0Email this to someone


பிரதி செவ்வாய் தோறும் நுட்பம் மடல் வெளியாகிறது.

நாம் உங்களுக்கு எந்த எரிதமும் அனுப்பமாட்டோம். உறுதியாக.