நுட்பத் துணுக்குகள்

பயனுள்ள நுட்பத் தகவல்கள் மற்றும் இணைப்புகள்
  • Vidque: காணொளிகளின் கதம்பம்

    இணையத்தில் காணொளிகளின் வியாபிப்பு மிகவும் வியக்கத்தக்கது. YouTube மற்றும் Vimeo போன்ற தளங்கள் மூலம் நாளாந்தம் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற காணொளிகளின் அளவு மிகவும் அதிகமானது. (ஒரு நிமிடத்திற்கு YouTube தளத்தில் மட்டும் 35 மணித்தியால காணொளிகள் இணைக்கப்படுகின்றன என்கிறது புள்ளிவிபரம்.) இவ்வாறு இணைக்கப்படும் காணொளிகளில் பொருத்தமான, தேவையான காணொளியை பெற்றுக் கொள்வது அவ்வளசு லேசுபட்ட காரியமல்ல. இந்த நிலையை இலகுவாக்கும் சாத்தியத்தை Vidque செய்கிறது. இதன் மூலம், காணொளிகளின் எண்ணிக்கையை விட அதன் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தரம் எப்போதும் முக்கியமென்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை தானே!

  • PDF கோப்புகளை இலகுவில் பார்வையிடல்

    PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்காக விசேடித்த செய்நிரல்கள் காணப்படுகின்றன. அதில் முதன்மையானது, Adobe நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் Adobe Reader ஐச் சொல்லலாம். ஆனாலும், இந்தச் செய்நிரலானது, கணினியில் செயற்படுத்தப்பட்டதும் அது தொழிற்பட கொஞ்சம் நேரமெடுக்கும். இந்த நேரவிரயத்தை நீக்கி, வேகமாக PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கியுள்ள பல செய்நிரல்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் குறிப்பிடத்தக்கவை இரண்டாகும். Foxit Reader, Sumatra PDF என்பவையே அவையாகும். இவற்றில், Sumatra PDF மின்னல் வேகத்தில் Windows OS இல் இயங்குவதோடு, Adobe Reader இன் சில விஷேடித்த பண்புகளையும் தன்னகம் கொண்டுள்ளது. Sumatra என்றவுடன் உங்களுக்கு சுனாமி சிலவேளை ஞாபகம் வந்திருக்கலாம். Sumatra PDF வேகமாக இயங்குவதால், நேரத்தைக் கொஞ்சம் சேமிக்கலாம்.

  • ஜிமெயிலிற்கு எளிமையான இடைமுகம்

    இணைய அடிப்படையான செய்நிரல்கள் பல நாளாந்தம் எமது கருமங்களை சுலபமாகச் செய்ய உதவிக் கொண்டேயிருக்கின்றன. ஆனாலும், இணையச் செய்நிரல்களில் நாம் பயன்படுத்தாத சில விடயங்கள் கூட அதன் இடைமுகத்தில் தோற்றமளித்து, திரையின் இடத்தையும் எடுத்து சில நேரங்களில் தேவையில்லாத தாமதிப்புகளையும் உண்டு பண்ணும். ஜிமெயிலில் இவ்வாறு தேவையல்லாத விடயங்களை தவிர்த்து தேவையான விடயங்களோடு, அதன் இடைமுகத்தை எளிமையாகத் தோற்றச் செய்வதற்கான Chrome இணைய உலாவியில் தொழிற்படும் நீட்டிப்பொன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. நீங்களும் இங்கு சென்று அந்த Minimalist Gmail என்ற extension ஐ உங்கள் Chrome இல் நிறுவுதன் மூலம் ஜிமெயிலின் இடைமுகத்தை எளிமையாக்கலாம்.

  • 2010: நுட்பங்களின் அறுசுவை

    கடந்த 2010 ஆம் ஆண்டு, தந்துவிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் சாதனைகள், சவால்கள் என பல கோணங்களையும் கொண்டவை. பல இணையத்தளங்களும் நுட்பங்கள் சார்பான கடந்த வருடத்தின் போக்கைப் பற்றி, தங்கள் பார்வைகளை வெளியிட்டிருந்தது. அதில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த Infographics என்னைக் கவர்ந்தது. இதேவேளை, New Scientist சஞ்சிகையின் தொழில்நுட்பம் சார்பான 2010 இன் பார்வையும் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் 2010 இன் முக்கிய 10 தொழில்நுட்ப விடயங்களின் தொகுப்பு இங்கேயிருக்கிறது. இதேவேளை, புதுநுட்பம் அன்பு வாசகர்களாகிய உங்களுக்கு எமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வருடத்திலும் உங்கள் நுட்பங்கள் பற்றிய புரிதலை விரிவாக்குவதில் துணை நிற்போம் என்று கூறிக் கொள்கிறோம். பல புதிய விடயங்கள் புதுநுட்பத்தில் வரவிருக்கின்றது. புது வருட வாழ்த்துக்கள்.

  • தமிழ் குரோம் Transliterate extension

    அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!

முந்தைய முந்தைய துணுக்குகள்
Popular Posts and Tags

மின்னஞ்சலில் புதுநுட்பம்

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

Twitter இல் எங்களைத் தொடருங்கள். @puthunutpam

Gmail இன் Undo Send ஐ பயன்படுத்துதல்

இணைய நிலை சார்ந்த மின்னஞ்சல் என நாம் கதைக்கின்ற போது, ஞாபகத்திற்கு வருவது, ஜிமெயில் தான். கூகிளினால் வழங்கப்படும் இந்த இணைய மின்னஞ்சல் வசதியானது, மின்னஞ்சல் பற்றிய சம்பிரதாய சிந்தனை தகர்த்தெறிந்தது எனலாம். இந்தப் புதுமையான சேவையை பலரும் பயன்படுத்தத் தொடங்கினர், இதன் மூலம் எய்தப்படும் நன்மைகள் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர். தேவையில்லாத எரிதங்களை வடிகட்டித் தரும் மிகச்சிறந்த தொழில்நுட்பமும் இந்த ஜிமெயிலில் இருப்பது அழகு. அண்மையில், இது அறிமுகப்படுத்திய Priority Inbox என்கின்ற புதிய நிலை சேவை கூட, தேவையான மின்னஞ்சல்களையும் தரம்பிரித்து தருவதை சாத்தியமாக்கியுள்ளது எனலாம்.

ஜிமெயில் தொடங்கிய காலத்திலிருந்தே மின்னஞ்சல் சேவை தொடர்பில் புதுமைகளைத் தந்து கொண்டேயிருந்தது. இதன் வளர்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 2008 ஆம் ஆண்டு, 13 பண்புகளை ஆளும் (Features) Gmail Labs என்ற புதிய பகுதியை ஜிமெயில் அறிமுகப்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள்.

காலத்திற்கு காலம் ஜிமெயிலின் பொறியியலாளர்கள், பரிசோதிக்கும் Features ஐ ஜிமெயில் பயனர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த நடவடிக்கை இருக்கிறது.

இந்த பரிசோதனை நிலை விடயங்களில் பலதும் பயன்தரக்கூடியதே! அவற்றில் ஒன்றான, Undo Send என்கின்ற நாம் ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களை குறித்த நபரை அடைவதற்கு முன்னர், எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைப் பார்க்கலாம். இந்த சிறப்பான வசதியானது, பலவேளைகளில் கைகொடுக்கும்.

Enable செய்தல்

முதலில் Gmail இன் Settings என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

அப்படி கிளிக் செய்த பின்னர், Gmail இன் Settings இன் இடைமுகம் காட்சிக்குப் புலனாகும். அதில் Labs என்ற Tabs ஐ கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு Labs tab ஐ கிளிக் செய்யும் போது, Gmail இல் Labs இலுள்ள அத்தனை வசதிகளும் பட்டியற்படுத்தப்பட்டிருக்கும்.

அவற்றுள், Undo Send என்பதை தேடி எடுக்க வேண்டும். வெறுமனே scroll செய்வதனால் கண்டுபிடிக்கலாம். ஆனால், அதை விடவும் இலேசான வழியொன்றும் உள்ளது, நீங்கள் உங்கள் விசைப்பலகையில், Ctrl + F ஐ ஒருமிக்க அழுத்தும் நிலையில், இணைய உலாவியின் தேடல் செய்வதற்கான இடைமுகம் தோன்றும் அதில் நீங்கள் Undo Send என்பதை type செய்கின்ற போது, அது இருக்கும் இடத்தை அப்படியே காட்டித்தரும்.

அவ்வாறு கண்டுபிடித்த Undo Send என்ற பதிவு நிலையை Enable என்ற தெரிவைக் கொண்டு தெரிவு செய்ய வேண்டும்.

பின்னர், அந்த இடைமுகத்தில் காணப்படும் Save Changes என்கின்ற Button ஐ கிளிக் செய்து, மாற்றங்களை சேமித்துக் கொள்ளலாம்.

நாம் ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சலை அவரை அடைவதற்கு முன்னரே திரும்பிப் பெற்றுக் கொள்ள தேவையான வசதி இப்போது தயார் நிலையில் இருக்கிறது.

எவ்வளவு நேரத்திற்குள் Undo செய்யலாம்?

இப்போது, நீங்கள் மின்னஞ்சல்களை அனுப்பியதும், உங்களில் மின்னஞ்சல் இடைமுகத்தின் மேலே Undo என்ற இணைப்பு தோன்றும். அதனை கிளிக் செய்வதன் மூலம் அனுப்பிய மின்னஞ்சலை திரும்பிப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால், எவ்வளவு நேரத்திற்குள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற கேள்வி நிராசையாகவே உங்களுக்குத் தோன்றலாம். இந்த வசதி Gmail இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் ஆறு செக்கன்களுக்குள் மாத்திரமே நீங்கள் Undo செய்ய முடியும். பின்னர், அந்த Undo இணைப்பு மறைந்து விடும். ஆனால், அண்மையில், Gmail புதிதாக Undo செய்வதற்கான நேரத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

நீங்கள் Gmail Labs இல் Undo Send ஐ Enable செய்ததும், Gmail இன் Settings இடைமுகத்தின் General tab இல் புதியதொரு தெரிவு தோன்றியிருக்கும். Send cancellation period என்று செக்கன்களில் நேரத்தை குறித்துக் காட்டியிருக்கும். அந்த drop down மெனுவிலிருந்து, 5 அல்லது 10 அல்லது 20 அல்லது 30 செக்கன்கள் என்ற நான்கு தெரிவுகளில் ஒன்றைத் தெரிவு செய்யலாம். உயர்ந்தபட்டசமாக 30 செக்கன்களையே தெரிவு செய்ய முடியும்.

இனியென்ன, தவறுதலாக அனுப்பிய அல்லது “ஐயோ, அந்த மெயிலில் ஒரு விடயத்தை சேர்க்க மறந்துட்டேனே!” என்ற கவலையெல்லாம் வேண்டாம். அனுப்பியதை திரும்பிப் பெற்று ஆனந்தம் கொள்ளுங்கள். ஆனால், எல்லாமே உச்சபட்சமாக 30 செக்கன்களுக்குள்ளே நடக்க வேண்டுமென்பது விதி.

அழகிய Ctrl + Z நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

பகிர்தல் பலன் தரும்

தொடர்புள்ள பதிவுகள்

எழுதியவர்

தாரிக் அஸீஸ், உதய தாரகை என்றே வலையுலகில் அறியப்பட்டவர். இவரால் நிறம் என்ற வலைப்பதிவு எழுதப்பட்டு வருகிறது. இவர் இணையத்தையும் கணினியையும் காதலிக்கிறார்.

Tags: , , , , ,
பதிப்பித்தது: September 4th, 2010
  • insaf

    hv tested it.. it works perfectly for 30 secs..tx

    [Reply]

    Vote -1 Vote +1தாரிக் அஸீஸ் Reply:

    Great, glad it helps you out! Stay tuned with PuthuNutpam! Cheers.

    [Reply]

  • Karan

    This is a cool feature. I like it very much.

    [Reply]