பதிப்புரிமை
உலகத்தின் அடுத்த வினாடியை நிர்ணயிக்கும் சக்தியாக இல்லாவிட்டாலும், தீர்மானம் எடுத்தல் என்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக நுட்பங்களைக் கண்டு கொள்ள முடிகிறது.
தொழில்நுட்பம் எமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இணையம் இல்லாத நிலையை இன்றளவில் பலரால் எண்ணிக்கூடப் பார்க்க முடிவதில்லை.
நுட்பங்கள் பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட விடயங்களை தமிழ் பேசும் நல்லுலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் புதுநுட்பம் தொடங்கப்படுகிறது. தொடர்ச்சியாக, அநேகமாக எல்லா நாளும் இந்தத் தளம் இற்றைப்படுத்தப்பட வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறோம்.
இதில் கணினி, இணையம், அறிவியல், எதிர்காலம், வாழ்க்கை என விரியும் அத்தனை பகுதியுள்ளும் காணப்படும் Tips, Tricks மற்றும் Hacks ஆகியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகின்றோம். அன்பைப் பகிர்தல் ஆனந்தத்தை தரும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு.
இந்தத் தகவல்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் அல்லது மறுபிரசுரம் செய்ய விரும்பினால், எமது மின்னஞ்சலுக்கு [puthunutpam@gmail.com] ஒரு மடல் எழுதிவிட்டு அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் தளத்தின் முகவரி [www.puthunutpam.com] மற்றும் குறித்த பதிவின் எழுத்தாளரின் பெயரோடு பிரசுரிக்க அல்லது பயன்படுத்த முடியும்.
புலமைச் சொத்துக்கள் தொடர்பில் உங்களுக்கு அதிக சிரத்தை இருக்குமென நம்புகிறோம்.
நன்றிகள் பல.
பகிர்தல் பலன் தரும்



