நுட்பத் துணுக்குகள்

பயனுள்ள நுட்பத் தகவல்கள் மற்றும் இணைப்புகள்
  • Vidque: காணொளிகளின் கதம்பம்

    இணையத்தில் காணொளிகளின் வியாபிப்பு மிகவும் வியக்கத்தக்கது. YouTube மற்றும் Vimeo போன்ற தளங்கள் மூலம் நாளாந்தம் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற காணொளிகளின் அளவு மிகவும் அதிகமானது. (ஒரு நிமிடத்திற்கு YouTube தளத்தில் மட்டும் 35 மணித்தியால காணொளிகள் இணைக்கப்படுகின்றன என்கிறது புள்ளிவிபரம்.) இவ்வாறு இணைக்கப்படும் காணொளிகளில் பொருத்தமான, தேவையான காணொளியை பெற்றுக் கொள்வது அவ்வளசு லேசுபட்ட காரியமல்ல. இந்த நிலையை இலகுவாக்கும் சாத்தியத்தை Vidque செய்கிறது. இதன் மூலம், காணொளிகளின் எண்ணிக்கையை விட அதன் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தரம் எப்போதும் முக்கியமென்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை தானே!

  • PDF கோப்புகளை இலகுவில் பார்வையிடல்

    PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்காக விசேடித்த செய்நிரல்கள் காணப்படுகின்றன. அதில் முதன்மையானது, Adobe நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் Adobe Reader ஐச் சொல்லலாம். ஆனாலும், இந்தச் செய்நிரலானது, கணினியில் செயற்படுத்தப்பட்டதும் அது தொழிற்பட கொஞ்சம் நேரமெடுக்கும். இந்த நேரவிரயத்தை நீக்கி, வேகமாக PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கியுள்ள பல செய்நிரல்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் குறிப்பிடத்தக்கவை இரண்டாகும். Foxit Reader, Sumatra PDF என்பவையே அவையாகும். இவற்றில், Sumatra PDF மின்னல் வேகத்தில் Windows OS இல் இயங்குவதோடு, Adobe Reader இன் சில விஷேடித்த பண்புகளையும் தன்னகம் கொண்டுள்ளது. Sumatra என்றவுடன் உங்களுக்கு சுனாமி சிலவேளை ஞாபகம் வந்திருக்கலாம். Sumatra PDF வேகமாக இயங்குவதால், நேரத்தைக் கொஞ்சம் சேமிக்கலாம்.

  • ஜிமெயிலிற்கு எளிமையான இடைமுகம்

    இணைய அடிப்படையான செய்நிரல்கள் பல நாளாந்தம் எமது கருமங்களை சுலபமாகச் செய்ய உதவிக் கொண்டேயிருக்கின்றன. ஆனாலும், இணையச் செய்நிரல்களில் நாம் பயன்படுத்தாத சில விடயங்கள் கூட அதன் இடைமுகத்தில் தோற்றமளித்து, திரையின் இடத்தையும் எடுத்து சில நேரங்களில் தேவையில்லாத தாமதிப்புகளையும் உண்டு பண்ணும். ஜிமெயிலில் இவ்வாறு தேவையல்லாத விடயங்களை தவிர்த்து தேவையான விடயங்களோடு, அதன் இடைமுகத்தை எளிமையாகத் தோற்றச் செய்வதற்கான Chrome இணைய உலாவியில் தொழிற்படும் நீட்டிப்பொன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. நீங்களும் இங்கு சென்று அந்த Minimalist Gmail என்ற extension ஐ உங்கள் Chrome இல் நிறுவுதன் மூலம் ஜிமெயிலின் இடைமுகத்தை எளிமையாக்கலாம்.

  • 2010: நுட்பங்களின் அறுசுவை

    கடந்த 2010 ஆம் ஆண்டு, தந்துவிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் சாதனைகள், சவால்கள் என பல கோணங்களையும் கொண்டவை. பல இணையத்தளங்களும் நுட்பங்கள் சார்பான கடந்த வருடத்தின் போக்கைப் பற்றி, தங்கள் பார்வைகளை வெளியிட்டிருந்தது. அதில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த Infographics என்னைக் கவர்ந்தது. இதேவேளை, New Scientist சஞ்சிகையின் தொழில்நுட்பம் சார்பான 2010 இன் பார்வையும் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் 2010 இன் முக்கிய 10 தொழில்நுட்ப விடயங்களின் தொகுப்பு இங்கேயிருக்கிறது. இதேவேளை, புதுநுட்பம் அன்பு வாசகர்களாகிய உங்களுக்கு எமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வருடத்திலும் உங்கள் நுட்பங்கள் பற்றிய புரிதலை விரிவாக்குவதில் துணை நிற்போம் என்று கூறிக் கொள்கிறோம். பல புதிய விடயங்கள் புதுநுட்பத்தில் வரவிருக்கின்றது. புது வருட வாழ்த்துக்கள்.

  • தமிழ் குரோம் Transliterate extension

    அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!

முந்தைய முந்தைய துணுக்குகள்
Popular Posts and Tags

மின்னஞ்சலில் புதுநுட்பம்

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

Twitter இல் எங்களைத் தொடருங்கள். @puthunutpam

"சிறப்பானவை" பகுப்பின் பதிவுகள்

HTML5: அறிய வேண்டிய ஐந்து விடயங்கள்

HTML5: அறிய வேண்டிய ஐந்து விடயங்கள்

எங்கு பார்த்தாலும், HTML5 பற்றிய பேச்சாகவே இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். “அந்த இணைய உலாவி அதற்கான வசதியை கொண்டிருக்கவில்லை, ஆனால், இந்த உலாவி கொண்டுள்ளது. இதுதான் சூப்பர் உலாவி” என்றெல்லாம் இணைய ஆர்வலர்கள் கதைப்பதைக் கேட்டிருப்பீர்கள். “இனி Video ஐ Play பண்ண Flash ஐ install பண்ணத் தேவையில்லையாமே! இப்ப HTML5 வந்திருக்காமே!” என்றும் மக்கள் சொல்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சரி. அப்படியானால், HTML5 என்றால் என்ன?

... 

Dropbox: அறிந்ததும் அறியாததும்

Dropbox: அறிந்ததும் அறியாததும்

Cloud Computing பற்றிய எண்ணக்கருவை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ, Cloud Computing உடன் தமது கருமங்களை நாளாந்தம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். Cloud Computing பற்றிய புரிதலை கொஞ்சம் விசாலமாக்குவதற்கு கீழ்வரும் காணொளியை அவதானமாகக் கவனியுங்கள்.

... 

Chrome OS & Web Store: நீங்கள் அறிய வேண்டியவைகள்

Chrome OS & Web Store: நீங்கள் அறிய வேண்டியவைகள்

அண்மையில் Google தனது Chrome Web Store ஐ உலகலளவில் அறிமுகம் செய்து வைத்தது. இதன் முழு நோக்கமும் Apple இன் Apps Store கையடக்கத் தொலைபேசிகளில் புரட்சி செய்தது போன்று, Chrome browser இல் ஆக்கபூர்வமான நிலைகளை ஏற்படுத்துவது ஆகும். இந்த Web Store இல் தேவையான இணைய செய்நிரலைகளைத் தேடி, நிறுவிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

... 

Gmail இன் Undo Send ஐ பயன்படுத்துதல்

Gmail இன் Undo Send ஐ பயன்படுத்துதல்

இணைய நிலை சார்ந்த மின்னஞ்சல் என நாம் கதைக்கின்ற போது, ஞாபகத்திற்கு வருவது, ஜிமெயில் தான். கூகிளினால் வழங்கப்படும் இந்த இணைய மின்னஞ்சல் வசதியானது, மின்னஞ்சல் பற்றிய சம்பிரதாய சிந்தனை தகர்த்தெறிந்தது எனலாம். இந்தப் புதுமையான சேவையை பலரும் பயன்படுத்தத் தொடங்கினர், இதன் மூலம் எய்தப்படும் நன்மைகள் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர். தேவையில்லாத எரிதங்களை வடிகட்டித் தரும் மிகச்சிறந்த தொழில்நுட்பமும் இந்த ஜிமெயிலில் இருப்பது அழகு. அண்மையில், இது அறிமுகப்படுத்திய Priority Inbox என்கின்ற புதிய நிலை சேவை கூட, தேவையான மின்னஞ்சல்களையும் தரம்பிரித்து தருவதை சாத்தியமாக்கியுள்ளது எனலாம்.

... 

கையடக்கத் தொலைபேசிகள் எம்மை முட்டாள்களாக்குகின்றனவா?

கையடக்கத் தொலைபேசிகள் எம்மை முட்டாள்களாக்குகின்றனவா?

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் அடைவுகள் எமது வாழ்வியல் கோலங்களை மாற்றியுள்ளனவா? இன்றைய நிலையில் கையடக்கத் தொலைபேசியும் கணினியும் ஒவ்வொரு தனிநபரிடமும் இருக்க வேண்டிய கட்டாய சாதனங்களாக மாறிவிட்டன. இந்தச் சாதனங்களைப் பாவிப்பவர்களின் தொகை மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.

... 

பலமான Password ஐ உருவாக்குதல்

பலமான Password ஐ உருவாக்குதல்

உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக் கொள்ளக்கூடியதும், ஏனையோரால் இலகுவில் ஊகிக்க முடியாததுமான Password ஏ பாதுகாப்பான Password என்ற வகைக்குள் அடங்கும். இன்றளவில், இணையத்தோடிணைந்த நிலைகள், மற்றும் வங்கி நடவடிக்கைகள் என்பன Password ஐயே எமது பாதுகாப்பின் திறவுகோலாக நம்பியிருக்கின்றன. ஆக, Password என்பது மிகவும் முக்கியமானதென்பது உண்மைதான்.

... 

தொட்டால் பூ மலரும்

தொட்டால் பூ மலரும்

தொழில்நுட்ப வளர்ச்சியின் வியாபிப்பு மிக வேகமாகவே இடம்பெற்று வருகின்றதை எம்மால் நிறையவே அவதானிக்க முடிகிறது. வளர்ச்சி காணும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சாத்தியங்கள் ஒன்றா, இரண்டா… இல்லேயே ஆயிரமாயிரம். இந்த தொழில்நுட்hத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியுள்ள இன்னொரு புதுமையான தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையே இக்கட்டுரை ஆராயப்போகிறது.

... 

Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!!

Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!!

இன்றைய காலகட்டத்தில் அதிகமான மென்பொருள்கள் இணையத்தின் மூலமாக Download செய்துகொள்ளப்படக்கூடிய வகையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை இலவசமாகவே பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் காணப்படுவது முக்கிய விடயமாகும். ஆனாலும், இவ்வாறு Download செய்யக்கூடிய வகையில் அமைந்த மென்பொருள்களோடு சேர்ந்தாற்போல் Spyware மற்றும் வைரஸ் போன்றவைகள் கணினியிற்கு Download ஆகும் அபாயங்களும் காணப்படுகின்றன.

...