எம்மைப் பற்றி
புதுநுட்பம் – நுட்பங்கள் தான் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூடச் சொல்லி விடலாம். மாற்றங்கள் என்றுமே மலிவாய் காணப்படும் துறையாகக் கூட நுட்பங்கள் பகுதியை சொல்லலாம்.
நாமும் மாறுகின்ற நுட்பங்கள் பற்றி அழகிய தமிழில் – குறிப்பாக இலகு தமிழில் உங்கள் அறிவுப் பசிக்கு தீனி போடலாம் என எண்ணுகின்றோம். கணினி தொட்டு செயற்கை நுண்ணறிவு மட்டும் விரிந்து பரந்து கிடக்கும் தொழில்நுட்பம் எல்லையே அற்றது. அத்துணை பரந்த தொழில்நுட்பம் பற்றிய துல்லியமான விடயங்களை அழகு தமிழில் புதுநுட்பம் தரும்.
இந்தத் தளத்தில் மிகப் பிந்திய அத்தனை தொழில்நுட்பங்கள் சார்ந்த விடயங்களையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். எமது குழு உங்களுக்கு புத்தம் புதிய தகவல்களை எவ்வளவு துரிதமாகத் தர முடியுமோ அவ்வளவு துரிதமாக தருவதற்காக திடசங்கல்பம் கொண்டுள்ளது.
புதுநுட்பத்தில் நீங்கள் காண விரும்பும் விடயங்களை சொல்லியனுப்புங்கள். கட்டாயம் சேர்த்துக் கொள்வோம். தேடல் என்பது யாவருக்குமிருக்க வேண்டிய கட்டாயமான பண்பு என்பதில் எமக்கு சந்தேகமே இல்லை.
நன்றிகள் பல.
தாரிக் அஸீஸ்
பிரதம ஆசிரியர் – புதுநுட்பம்
நிறம் என்ற வலைப்பதிவின் மூலம் உதய தாரகை என அறியப்பட்டவர். அவரின் இணையத்தளமும் Niram.org ஆகும். Twitter இல் இவரை பின்தொடரலாம். @enathu
All posts at PuthuNutpam.com are written by Tharique Azeez
பகிர்தல் பலன் தரும்



