அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!
Skype இன் iPhone app மூலம் வீடியோ அழைப்பு
தொலைத் தொடர்பாடலின் நிலைகளை அதிகளவில் இலகுவாக்கிய பெருமை Skype ஐயே சாரும். VoIP என்ற தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்தத் தொடர்பாடல் சேவை, பல புதிய சேவைகளை நாளுக்கு நாள் அறிமுகப்படுத்துவது வழக்கம். இன்று முதல், iPhone பாவிக்கும் பயனர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் நிறுவப்பட்டுள்ள Skype செய்நிரலைக் கொண்டு, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பை Skype வழங்கியுள்ளது. இதன் படி, Skype இன் வீடியோ அழைப்புகளை WiFi மற்றும் 3G போன்ற நிலைகளிலிருந்து இன்னொரு Skype பயனருக்கு ஏற்படுத்தும் வசதி ஏற்பட்டுள்ளது. எமது ஆரம்ப அழைப்புகள் துல்லியமாகவிருந்தது பற்றியும் சொல்லியாக வேண்டும். இதேவேளை, கடந்த வாரம் Skype இன் மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக தனது சேவை சில நாட்களுக்கு வழங்க முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
Dropbox: அறிந்ததும் அறியாததும்
Cloud Computing பற்றிய எண்ணக்கருவை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ, Cloud Computing உடன் தமது கருமங்களை நாளாந்தம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். Cloud Computing பற்றிய புரிதலை கொஞ்சம் விசாலமாக்குவதற்கு கீழ்வரும் காணொளியை அவதானமாகக் கவனியுங்கள்.
நகைச்சுவை கலந்த சாதனக் கையேடு
Google இனால், அண்மையில் வெளியிடப்பட்ட Chrome OS கொண்டு இயங்கக்கூடியதான Cr-48 மடிக்கணினிகளைப் பற்றி நாங்கள் புதுநுட்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். குறித்த மடிக்கணினியை குறிப்பிட்ட பயனர்களுக்கு பரீட்சாத்தமாக செயற்படுத்தி அதன் செயற்றிறனை கணிப்பிடும் நிலையை Google நடத்தி வருகிறது. இந்த மடிக்கணினியோடு வழங்கப்படும் User Manual (பயனர் கையேடு) மிகவும் சுவாரஸ்யமானது. குறிப்பாக பயனர் கையேடுகளை யாரும் கணக்கிலெடுப்பதில்லை. ஆனால், நகைச்சுவை கலந்த நிலையோடு, உருவாக்கப்பட்டுள்ள இந்த பயனர் கையேடு வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாகவிருந்தது. வாசித்துப் பாருங்கள். நீங்கள் முதன் முறையாக முழுமையாக வாசிக்கும் User Manual ஆக அது கட்டாயமிருக்கும்.
Facebook நிறுவுனர் Mark Zuckerberg, 2010 இன் TIME Person of the Year
ஒவ்வொரு வருடமும் உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆளுமைகளை கௌரவிக்கும் பொருட்டு, பிரபலமான TIME சஞ்சிகையினால், குறித்த ஆண்டிற்கான Person Of The Year விருது அறிவிக்கப்படுவதுண்டு. 2010 ஆம் ஆண்டிற்கான Person of the Year ஆக, Facebook இன் ஸ்தாபகரான Mark Elliot Zuckerberg தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Facebook ஐ உருவாக்கியதன் மூலம் உலகின் மக்களை இணைக்கும் காரியத்தை வெகு லாவகமாக தொழில்நுட்பம் கொண்டு கையாண்டதன் விளைவே Mark Zuckerberg தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதற்கான காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதுவரையில், Facebook இல், 500 மில்லியன் பயனர்கள் கணக்குகளை வைத்திருக்கிறார்கள் என்பது போனஸ் தகவல். இதேவேளை, 2006 ஆம் ஆண்டு TIME இன் Person Of The Year ஆக நீங்கள் (You) தெரிவு செய்யப்பட்ட விடயத்தை மறந்துவிடாதீர்கள். அதனை எண்ணி பெருமைப்படுங்கள்.
பெற்றோருக்கு தொழில்நுட்பம் சொல்லிக் கொடுத்தல்
கணினியின் தேவை, இணையத்தின் மூலம் மக்கள் தங்கள் கருமங்களை ஆற்றும் வழக்கம் என்பன நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. கணினியை எல்லோரும் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குள் காலம் வந்துவிட்டது. கையடக்கத் தொலைபேசிகளின் பிந்திய பதிப்புகள் பலதும் கணினி போன்றே தொழிற்படுவது கவனிக்கப்பட வேண்டியது. இந்த நிலையில், புதிதாக கணினியை உபயோகிக்க தொடங்கியிருக்கும் உங்கள் பெற்றோருக்கோ அல்லது உற்றவர்களுக்கோ அது பற்றிய அடிப்படை அறிவை வழங்குவது அவசியம் தான். அந்த வேலையை இலகுவில் செய்வதற்காக Google, இன்று புதிய தளமொன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன் பெயரும் கூட Teach Parents Tech என்பதாகும். இந்தத் தளத்தின் மூலம் கணினி சார்பான அடிப்படை விடயங்களை எவ்வாறு செய்வதென்பதை விளக்குவதாய் அமைந்த காணொளிகளை உங்கள் உற்றவர்களுக்கு அனுப்பலாம். இதன் மூலம் அவர்கள் எளிதாக கணினி பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பேற்படும். உங்களின் அன்புக்குரியவர்களுக்கு கணினி பற்றிய விடயங்களை கற்றுக் கொடுங்கள். அதற்கான இணைப்பு http://www.teachparentstech.org/ என்பதாகும்.
Chrome OS & Web Store: நீங்கள் அறிய வேண்டியவைகள்
அண்மையில் Google தனது Chrome Web Store ஐ உலகலளவில் அறிமுகம் செய்து வைத்தது. இதன் முழு நோக்கமும் Apple இன் Apps Store கையடக்கத் தொலைபேசிகளில் புரட்சி செய்தது போன்று, Chrome browser இல் ஆக்கபூர்வமான நிலைகளை ஏற்படுத்துவது ஆகும். இந்த Web Store இல் தேவையான இணைய செய்நிரலைகளைத் தேடி, நிறுவிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



