Posted : Nov - 30 - 2010 @ : 9:05 pm | Filled under:
தொழில்நுட்பம்,
நுட்பத் துணுக்குகள் |
No comments
மிகவும் இலகுவாக கோப்புகளை இணையத்தில் பகிர்ந்து கொள்வதை சாத்தியமாக்கும் வசதியை Ge.tt என்ற இணைய செய்நிரல் வழங்குகின்றது. இங்கு உங்கள் கோப்பை இணைத்த மாத்திரத்திலேயே குறித்த கோப்பிற்கான இணைப்பை நீங்கள் விரும்பியவரோடு பகிர்ந்து கொள்ள முடியும். குறித்த கோப்பு Upload ஆகும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்பது சுவையான தகவல். அத்தோடு, Java Applet, Flash போன்ற எந்த நீட்டிப்புக்களையும் இந்தச் சேவை உபயோகிக்கவில்லை என்பது இன்னொரு போனஸ் தகவல். இனியென்ன தாமதம், சென்றுதான் பாருங்களேன்.
Posted : Nov - 17 - 2010 @ : 11:01 pm | Filled under:
தொழில்நுட்பம்,
நுட்பத் துணுக்குகள் |
No comments
Google Docs இல் சேமிக்கப்படும் ஆவணங்களை Android (Version 2.2) மற்றும் iOS (Version 3+) [iPhone & iPad] செயல் முறைகளை பயன்படுத்தும் கையடக்கக் கருவிகளின் மூலம் தொகுக்கக்கூடிய வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று Google இன் உத்தியோகபூர்வ வலைப்பதிவில் அறிவிக்கப்பட்டிருந்தது. Goodle Docs சேவை மூலம் உங்களது ஆவணங்களை இணையத்திலேயே உருவாக்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இதனால், இணைய இணைப்புள்ள எந்த இடத்தில் உங்களால் சேமித்து வைக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாகவிருக்கும். இதேவேளை Gmail ஐத் தொடர்ந்து Google Docs உம் Twitter இல் தங்களின் இருப்பை உறுதி செய்திருக்கிறார்கள். Google Docs ஐ நீங்கள் @googledocs என்ற முகவரியில் பின்தொடர முடியும். கையடக்கக் கருவிகளில் Edit செய்யும் வசதி ஒரு சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது எவ்வாறு தொழிற்படும் என்பதை இந்தக் காணொளியை காண்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். (காணொளி காண icon ஐ அழுத்துங்கள்.)