Twitter இல் Gmail
Twitter கணக்கொன்றை ஒவ்வொருவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் அதிகமாகவே உணரப்படுகிறது எனலாம். அண்மையில், Google Instant ஐத் தொடர்ந்து அதனைப் போல, இயங்கும் YouTube Instant ஐ உருவாக்கிய மாணவனை YouTube இன் ஸ்தாபகருள் ஒருவரனான, Chad Hurley தொடர்பு கொண்டதும் Twitter மூலமாகத்தான். அதேவேளை, குறித்த தளம் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது. இந்த நிலையில், இன்று Gmail ஆனது, Twitter இல் தனது இருப்பைக் குறித்துக் கொண்டது. இதன்படி, நீங்கள் Gmail ஐ Twitter இல் தொடர முடியும். இதன் மூலம் Gmail பற்றிய புதிய விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வாய்ப்பேற்படும். Gmail ஐ Twitter இல் தொடர.. http://twitter.com/gmail



