Posted : Sep - 02 - 2010 @ : 2:55 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
iPad இற்கான உத்தியோகபூர்வமான Twitter App ஆனது, இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த App பல கவர்ச்சிகரமான புதிய வசதிகளைக் கொண்டிருப்பது iPad பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதெனலாம். iPad இன் Twitter App ஐ iPhone இன் Twitter App இனது, மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. அது முற்றிலும் புதிய இடைமுகத்தை கொண்டிருப்பதோடு, மிகவும் துரிதமாக இணையத்தளங்கள் மற்றும் நிழற்படங்களை பார்வையிடும் வாய்ப்பையும் இது ஏற்படுத்தித் தருகிறது. iPad இற்கான Twitter ஐ இங்கு பதிவிறக்கிக் கொள்ள முடியும்.
Posted : Sep - 02 - 2010 @ : 1:43 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
நேற்று இடம்பெற்ற Apple இன் செய்தியாளர் மாநாட்டில், புதிதாக iTunes 10 மற்றும் Ping என்ற இசைப்பிரியர்களுக்கான சமூக வலைப்பின்னல் என்பன உருவாக்கப்பட்ட போதிலும், அங்கு எண்கள் பற்றிய தரவுகள் முதன்மை பெற்றது எனலாம். அண்மையில் Google ஆனது, தாங்கள் நாளாந்தம் 200,000 Android தொலைபேசிகளை Activate செய்வதாக அறிவித்தது. அதேவேளை, Apple நாளாந்தம் 230,000 iPhone களை Activate செய்வதாக அறிவித்துள்ளது. இதுவரையிலும், Apple AppStore இலிருந்து 6.5 பில்லியன் Apps பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, 275 மில்லியன் iPod களை இதுவரையில் Apple விற்பனை செய்திருக்கிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Ping சேவை, 160 மில்லியன் பயனர்கள் இணைந்த நிலையிலேயே தொடங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது iTunes இலிருந்து 100 மில்லியன் தடைவை திரைப்படங்களும், 450 மில்லியன் தடைவை தொலைக்காட்சித் தொடர்களும், 35 மில்லியன் தடைவை புத்தகங்களும், 11.7 பில்லியன் தடைவை பாடல்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
Posted : Sep - 01 - 2010 @ : 3:16 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
Google Wave செயற்றிட்டமானது, இந்த வருடத்தின் இறுதியில் Google நிறுவனத்தினால் கைவிடப்படவுள்ளதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏற்கனவே உருவாக்கப்பட்ட Google Waveகளை வேறொரு இடத்திற்கு மாற்றி சேமிப்பதற்கான வழிகளை தரவிருப்பதாக அண்மையில் Google Wave வலைப்பதிவில் பதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, Google Wave இன் உன்னதமான சாத்தியங்களை Google இன் ஏனைய செய்நிரல்களில் சேர்க்கும் படலம் சூடுபிடித்திருக்கிறது. Google Docsஇல் Waveஇன் சாத்தியங்கள் சேர்க்கப்பட்டு ஒறுமித்த நிலையில் ஆவணங்களை தொகுக்கும் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
Posted : Sep - 01 - 2010 @ : 2:06 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
Apple நிறுவனத்தின் செய்தியாளர் மாநாடானது, இன்று GMT நேரப்படி 1800 இற்கு (இன்னும் நான்கு மணித்தியாலத்தில்) ஆரம்பமாகவுள்ளது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், Apple இன் செய்தியாளர் மாநாடாக்கட்டும், செய்நிரலாளர்களின் மாநாடாக்கட்டும் அவை எதுவும் Apple நிறுவனத்தால் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. மாறாக, தொடர்ந்து Refresh ஆகும் பிரபலமான வலைப்பதிவுகளிலிருந்தே நேரடி தகவல்களைப் பெறமுடியும். ஆனால், முதல் தடைவையாக, இன்று Apple நிறுவனம் நேரடியாக வீடியோ ஒளிபரப்பை தனது உத்தியோகபூர்வ தளத்தில் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
Posted : Sep - 01 - 2010 @ : 4:49 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
Twitter இன் Who to follow எனும் பின்தொடரப் பொருத்தமானவர்களை பிரேரிக்கும் வசதியானது, நேற்றைய தினம் சரியாக இயங்கவில்லை என Twitter பயனர்களால் பேசிக் கொள்ளப்பட்டது. தாங்கள் ஏற்கனவே பின் தொடருபவர்களையே மீண்டும் அது பின்தொடர பிரேரிப்பதாக பலரும் ட்விட்டியிருந்தார்கள். இந்தப் பிழையை தாம் திருத்திவிட்டதாக Twitter அறிவித்துள்ளது. ஆனால், Who to follow வசதி உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அது Twitter தளத்தில் தேவையில்லையா? இதோ இருக்கிறது நீட்டிப்பொன்று, உங்கள் இணைய உலாவியில் நிறுவி ஆனந்தம் கொள்ளுங்கள்.
Posted : Sep - 01 - 2010 @ : 3:00 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
வர்த்தக நிலைகளில் அன்றாடம் பாவிக்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கான இலகுவான பொருளை அறிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் Unsuck It என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிகத்தில் (Business) பாவிக்கப்படும் புதிரான பல சொற்களை இந்தத் தளம் இலகுவான முறையில் பொருள் விளங்கும்படி செய்கிறது. Bottleneck, Sanity Check ஏன் சாரா போலினின் Refudiate என எல்லாச் சொற்களுக்கும் புரிந்து கொள்ளும் படியான கருத்துக்களை இது சொல்லித் தருகிறது.
Posted : Sep - 01 - 2010 @ : 2:26 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
Google நிறுவனத்தின் ஆளுமைமிக்க செய்நிரல் தொகுப்பாளர்களால், இணையத்தின் தகவல்களைக் கொண்ட வகையில் அமைந்த இரசாயன ஆவர்த்தன அட்டவணையொத்த Google பற்றிய ஆவர்த்தன அட்டவணையொன்று அண்மையில் உலகளாவிய Google அலுவலகங்களுக்கிடையான போட்டியில் உருவாக்கப்பட்டது. அழகான அத்தோடு பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்ட அந்த ஆவர்த்தன அட்டவணையை இங்கே காணலாம். (Zoom செய்து பெரிதாக்கி காண முடியும்.)