நுட்பத் துணுக்குகள்

பயனுள்ள நுட்பத் தகவல்கள் மற்றும் இணைப்புகள்
  • Vidque: காணொளிகளின் கதம்பம்

    இணையத்தில் காணொளிகளின் வியாபிப்பு மிகவும் வியக்கத்தக்கது. YouTube மற்றும் Vimeo போன்ற தளங்கள் மூலம் நாளாந்தம் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற காணொளிகளின் அளவு மிகவும் அதிகமானது. (ஒரு நிமிடத்திற்கு YouTube தளத்தில் மட்டும் 35 மணித்தியால காணொளிகள் இணைக்கப்படுகின்றன என்கிறது புள்ளிவிபரம்.) இவ்வாறு இணைக்கப்படும் காணொளிகளில் பொருத்தமான, தேவையான காணொளியை பெற்றுக் கொள்வது அவ்வளசு லேசுபட்ட காரியமல்ல. இந்த நிலையை இலகுவாக்கும் சாத்தியத்தை Vidque செய்கிறது. இதன் மூலம், காணொளிகளின் எண்ணிக்கையை விட அதன் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தரம் எப்போதும் முக்கியமென்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை தானே!

  • PDF கோப்புகளை இலகுவில் பார்வையிடல்

    PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்காக விசேடித்த செய்நிரல்கள் காணப்படுகின்றன. அதில் முதன்மையானது, Adobe நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் Adobe Reader ஐச் சொல்லலாம். ஆனாலும், இந்தச் செய்நிரலானது, கணினியில் செயற்படுத்தப்பட்டதும் அது தொழிற்பட கொஞ்சம் நேரமெடுக்கும். இந்த நேரவிரயத்தை நீக்கி, வேகமாக PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கியுள்ள பல செய்நிரல்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் குறிப்பிடத்தக்கவை இரண்டாகும். Foxit Reader, Sumatra PDF என்பவையே அவையாகும். இவற்றில், Sumatra PDF மின்னல் வேகத்தில் Windows OS இல் இயங்குவதோடு, Adobe Reader இன் சில விஷேடித்த பண்புகளையும் தன்னகம் கொண்டுள்ளது. Sumatra என்றவுடன் உங்களுக்கு சுனாமி சிலவேளை ஞாபகம் வந்திருக்கலாம். Sumatra PDF வேகமாக இயங்குவதால், நேரத்தைக் கொஞ்சம் சேமிக்கலாம்.

  • ஜிமெயிலிற்கு எளிமையான இடைமுகம்

    இணைய அடிப்படையான செய்நிரல்கள் பல நாளாந்தம் எமது கருமங்களை சுலபமாகச் செய்ய உதவிக் கொண்டேயிருக்கின்றன. ஆனாலும், இணையச் செய்நிரல்களில் நாம் பயன்படுத்தாத சில விடயங்கள் கூட அதன் இடைமுகத்தில் தோற்றமளித்து, திரையின் இடத்தையும் எடுத்து சில நேரங்களில் தேவையில்லாத தாமதிப்புகளையும் உண்டு பண்ணும். ஜிமெயிலில் இவ்வாறு தேவையல்லாத விடயங்களை தவிர்த்து தேவையான விடயங்களோடு, அதன் இடைமுகத்தை எளிமையாகத் தோற்றச் செய்வதற்கான Chrome இணைய உலாவியில் தொழிற்படும் நீட்டிப்பொன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. நீங்களும் இங்கு சென்று அந்த Minimalist Gmail என்ற extension ஐ உங்கள் Chrome இல் நிறுவுதன் மூலம் ஜிமெயிலின் இடைமுகத்தை எளிமையாக்கலாம்.

  • 2010: நுட்பங்களின் அறுசுவை

    கடந்த 2010 ஆம் ஆண்டு, தந்துவிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் சாதனைகள், சவால்கள் என பல கோணங்களையும் கொண்டவை. பல இணையத்தளங்களும் நுட்பங்கள் சார்பான கடந்த வருடத்தின் போக்கைப் பற்றி, தங்கள் பார்வைகளை வெளியிட்டிருந்தது. அதில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த Infographics என்னைக் கவர்ந்தது. இதேவேளை, New Scientist சஞ்சிகையின் தொழில்நுட்பம் சார்பான 2010 இன் பார்வையும் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் 2010 இன் முக்கிய 10 தொழில்நுட்ப விடயங்களின் தொகுப்பு இங்கேயிருக்கிறது. இதேவேளை, புதுநுட்பம் அன்பு வாசகர்களாகிய உங்களுக்கு எமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வருடத்திலும் உங்கள் நுட்பங்கள் பற்றிய புரிதலை விரிவாக்குவதில் துணை நிற்போம் என்று கூறிக் கொள்கிறோம். பல புதிய விடயங்கள் புதுநுட்பத்தில் வரவிருக்கின்றது. புது வருட வாழ்த்துக்கள்.

  • தமிழ் குரோம் Transliterate extension

    அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!

முந்தைய முந்தைய துணுக்குகள்
Popular Posts and Tags

மின்னஞ்சலில் புதுநுட்பம்

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

Twitter இல் எங்களைத் தொடருங்கள். @puthunutpam

MSN Spaces மூடப்படுகிறது; WordPress.com உடன் இணைகிறது.

Microsoft இன், Windows Live (முன்னர் MSN என அறியப்பட்ட) Spaces தனது சேவையை நிறுத்திக் கொண்டு, அதன் 30 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் வலைப்பதிவுகளை Wordpress.com இற்கு இடமாற்றஞ் செய்கின்றது. இவ்வாறு MSN Spaces இல் ஏற்கனவே வலைப்பதிவுகளை வைத்திருப்போர், இன்று தொடக்கம் தங்கள் வலைப்பதிவுகளை Wordpress.com தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த மாற்றமானது, ஆறு மாத காலத்திற்குள் செய்ய முடியும். அதன் பின்னர், MSN Spaces தனது சேவையை முற்றிலும் இடை நிறுத்திக் கொள்ளும். இதே வேளை, இந்த மாற்றங்களை எவ்வாறு செய்ய முடியும் என்பது பற்றிய விரிவான விளக்கங்களை Wordpress.com தளம் விரிவாக விளக்கியுள்ளது. அவற்றை நீங்கள் இங்கு வாசித்தறிந்து கொள்ள முடியும்.

Google இன் புதிய விடயங்களை தெரிதல்

நீங்கள் அறிந்து வைத்திருப்பது போலவே, Google நாளாந்தம் பல்வேறு வகையான புதிய வசதிகளை தமது சேவைகளில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அத்தோடு, அவை புதிதாக சேவைகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுபற்றி அறிந்து கொள்வதற்கு Google இன் குறித்த சேவைக்கான வலைப்பதிவை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதையும் தாண்டி, ஒரேயிடத்தில் அத்தனை சேவைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில், Google விஷேடமான தளமொன்றை ஆரம்பித்துள்ளது. அதன் பெயரும் Google New என்பதுதான். இனி, நீங்கள் Google பற்றிய அனைத்துப் புதிய விடயங்களை அந்தத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.

புதிய Twitter

Twitter இன் புதிய இடைமுகமானது, நேற்று வெளியிடப்பட்டது. இதன் மூலம், Twitter தளத்திலிருந்தபடியே tweet களில் செருகலாகவரும், நிழற்படங்கள், காணொளிகள் என்பவற்றை கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வசதிகளைத் தரும், வேற்று செய்நிரல்களுக்கான மௌசு குறையலாமென பேசிக் கொள்ளப்படுகிறது. இதேவேளை, இந்தப் புதிய Twitter இன் இடைமுகத்தினை ஒரு சில வாரங்களில் அனைத்துப் பயனர்களும் பெறமுடியுமென அறிவிக்கப்பட்டது. நேற்றைய தினமே பல பயனர்கள் இந்தப் புதிய இடைமுகத்தை தங்களின் Twitter கணக்கில் பெற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். புதிய Twitter என்னவென்பதை கீழுள்ள காணொளி விளக்கிச் சொல்லும். (காணொளியைக் காண icon ஐ கிளிக் செய்யுங்கள்.)

புதிய Google Instant

Google இன் logo ஆனது கடந்த இரண்டு தினங்களாக மாற்றமாகிக் கொண்டு காட்சியளித்ததற்கான காரணம் Google இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அம்பலப்படுத்தப்பட்டது. Google Instant என்பதுதான் அது. இதன் மூலம் நீங்கள் சொற்களை தட்டச்சு செய்யும் போதே திரையில், தேடல் பெறுபேறுகள் காட்சியாகத் தொடங்கும். இதுபற்றி மிக விரிவாக விளக்கத்தை இங்கே காணலாம். அத்தோடு இனால், வெளியிடப்பட்டுள்ள இது தொடர்பான வீடியோவும் சுவையானது. (வீடியோவைக் காண கீழேயுள்ள icon ஐ கிளிக் செய்யவும்.)

Google logo இன்றும் விஷேடம்

இன்றைய தினமும் Google தளத்தின் அதன் logo ஆனது, விஷேடமாகக் காட்சியளிப்பது சுவை. நீங்கள் தேடற்பெட்டிக்குள் type செய்யும் போது, உங்களை தொடரந்து அதன் logo களும் வர்ணமாகிவருவதை நீங்கள் அவதானிப்பீர்கள். குறித்த logo தளத்தில் சாம்பல் நிறத்தில் காணப்பட்ட போதிலும், type செய்யும் விதத்தில் அது நிறமடைவதை கண்டு கொள்ள முடிகிறது. நேற்றைய தினமும் Google தளத்தில் பறந்து செல்லும் வண்ணப் வண்ணப்பந்துகள் logo ஆக காட்சியானதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த logo மாற்றமானது, எதற்காகச் செய்யப்படுகிறது என்பதை Google இந்தச் செய்தி தயாரிக்கும் வரையிலும் வெளிப்படுத்தவில்லை. (இன்றைய logo வின் இயங்குதன்மையைக் காண கீழேயுள்ள icon ஐ கிளிக் செய்யுங்கள்)

இன்றைய Google logo என்ன சொல்கிறது?

இன்றைய தினம், Google தளத்தில் காட்சியாகும் logo ஆனது, மிகவும் கவர்ச்சிகரமாகவும், இடைத் தொடர்பாடலையும் அதிகப்படுத்துவதாய் அமைந்துள்ளது. எதற்காக இந்த logo தளத்தில் இடப்பட்டுள்ளது என்பது இதுவரையில் Google ஆல், அறிவிக்கப்படவில்லை. பலரும் Google இன் பன்னிரண்டாவது பிறந்தநாளுக்கான logo எனச் சந்தேகம் தெரிவிக்கின்றனர். ஆனால், Google இன் முதலாவது பிறந்த நாள், செப்டம்பர் 27 ஆம் திகதி கொண்டாடப்பட்டதோடு, பின்னர் அது இரண்டாவது பிறந்த நாள் செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. பின்னர், அது செப்டம்பர் 27 ஆம் திகதியே கொண்டாடப்படுகிறது. ஆக, இது பிறந்தநாளுக்கான logo என்பதும் சந்தேகமானதே! Google இன் அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். அது வரை அழகிய logo ஐ கண்டுகளியுங்கள். (வீடியோவைக் காண கீழேயுள்ள icon ஐ கிளிக் செய்யுங்கள்)

Windows Phone 7: புரட்சி ஏற்படுத்துமா?

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள Microsoft நிறுவனத்தின் புதிய Smartphone வகையான கையடக்கத் தொலைபேசியான Windows Phone 7, தொழில்நுட்ப சாதனங்கள் பரப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதெனலாம். Windows Mobile என்றிருந்த பழைய கையடக்கத் தொலைபேசியின் புதிய பதிப்பாகவே, இந்த Windows Phone 7 ஆகும். அதேவேளை, அண்மையில் இந்தப்புது smartphone இன் வருகையைக் குறிக்கும் முகமாக வெளியான வீடியோ விளம்பரமானது, “புரட்சியொன்று வரப்போகிறது” என்ற தொனிப்பொருளில் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையாகவே, இந்தப் புதிய smartphone புரட்சியை ஏற்படுத்துமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (விளம்பர வீடியோவைக் காண கீழேயுள்ள icon ஐ கிளிக் செய்யுங்கள்)

நாளைய தொழில்நுட்பம் 4G மிக வேகமானது

எதிர்காலத்தில் வரவிருக்கும் கம்பியில்லா (wireless) தொழில்நுட்பமானது, 5 நிமிட வீடியோவொன்றை வெறும் ஒருசில செக்கன்களில் பார்க்க தயார்நிலைக்கு கொண்டு வரும் சாத்தியமுடையதென அந்த தொழில்நுட்பத்தை பிரசித்தம் செய்பவர்கள் தெரிவிக்கின்றனர். அந்தளவான வீடியோவொன்றை காண்பதற்கான தயார் நிலை, இன்றைய கால தொழில்நுட்பத்தில் சில நிமிடங்களிலேயே எய்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய தொழில்நுட்ப வருவிளைவுகள் அமெரிக்காவின் பல இடங்களில் இப்போது, பரீட்சாத்தமாக பாவனைக்கு விடப்பட்டுள்ளது. சாதாரணமாக, 3G தொழில்நுட்பத்தில் தரவுகள் 1 தொடக்கம் 2 Mbps (megabits per second) வேகத்திலேயே பரிமாறப்படும். ஆனால், இந்த வருடம் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பரிசோதிக்கப்பட்ட 4G தொழில்நுட்பத்தின் வேகமானது, 20 தொடக்கம் 70 Mbps இல் இருந்ததாக Clearwire தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவிக்கிறது. எது எப்படியோ, எதிர்காலத்தின் தொழில்நுட்பங்கள் வேகமாகவிருக்கும் என்பது வெளிப்படை.

Facebook இல் Logout ஆக மறந்துவிட்டதா?

இன்றைய நிலையில் அதிகமானோரை கவர்ந்துவிட்டுள்ள சமூக வலையமைப்புச் சேவையாக Facebook ஐ சொல்ல முடியும். இதன் வியாபிப்பானது, “இந்த நாட்களில், இளசுகள் படிக்கும் ஒரேயொரு புத்தகம்: Facebook” என்ற வகையில், Twitter இல் மக்கள் பேசுமளவிற்கு உணரப்படுகிறது. Facebook ஐ எங்கு சென்றபோது, பார்த்துவிட வேண்டுமென துடிப்போர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும். நீங்களும் அப்படியிருக்கலாம். நீங்கள் நண்பனின் கணினியிலோ அல்லது செல்பேசியிலோ அல்லது இணைய உலாவு நிலையத்திலோ உங்களின் Facebook ஐ பார்த்துவிட்டு, Logout ஆகாமல், வந்துவிட்டால், என்ன கதி? அந்த கணினியில் அல்லது செல்பேசியிலிருந்து வேறொருவரும் உங்கள் Facebook கணக்கில் எதுவும் செய்யலாம். கவலையை விடுங்கள். இன்றிலிருந்து நீங்கள் மறந்து logout ஆகவிருந்த நிலைகளை எந்தக் கணினியிலிருந்தும் logout செய்து கொள்ளும் வசதியை Facebook அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களின் Account Settings பக்கத்தில் காணப்படும் Account Security என்ற பகுதியில் இதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது பலபேருக்கு கொஞ்சம் நிம்மதியாவது தரும் என நம்பலாம்.

Gmail இன் Undo Send ஐ பயன்படுத்துதல்

இணைய நிலை சார்ந்த மின்னஞ்சல் என நாம் கதைக்கின்ற போது, ஞாபகத்திற்கு வருவது, ஜிமெயில் தான். கூகிளினால் வழங்கப்படும் இந்த இணைய மின்னஞ்சல் வசதியானது, மின்னஞ்சல் பற்றிய சம்பிரதாய சிந்தனை தகர்த்தெறிந்தது எனலாம். இந்தப் புதுமையான சேவையை பலரும் பயன்படுத்தத் தொடங்கினர், இதன் மூலம் எய்தப்படும் நன்மைகள் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர். தேவையில்லாத எரிதங்களை வடிகட்டித் தரும் மிகச்சிறந்த தொழில்நுட்பமும் இந்த ஜிமெயிலில் இருப்பது அழகு. அண்மையில், இது அறிமுகப்படுத்திய Priority Inbox என்கின்ற புதிய நிலை சேவை கூட, தேவையான மின்னஞ்சல்களையும் தரம்பிரித்து தருவதை சாத்தியமாக்கியுள்ளது எனலாம்.

Ubuntu இன் Maverick Meerkat beta வெளியாகியது

Linux பணிசெயல் முறையின், மிகப்பிரபல்யமான distribution ஆன Ubuntu, தனது புதிய 10.10 பதிப்பின் (மாவரிக் மீர்காட் – Maverick Meerkat) Beta பதிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இதன் இறுதிப் பதிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகும் என்பது கவனிக்கத்தக்கது. நீங்களும் இந்த beta பதிப்பினை தரவிறக்கம் செய்து கொண்டு, அதன் புதிய விடயங்கள் என்ன சேர்க்கப்பட்டுள்ளதென அறியலாம். ஏதும் பிழைகளைக் கண்டால், அறிவிக்கலாம் என கட்டற்ற மென்பொருள் நிலைக்கு உங்களின் பங்களிப்பைச் செய்யலாம்.

Google Chrome இற்கு வயது இரண்டு

மிகக்குறுகிய காலத்தில் அதிகளவில் பிரபல்யமான இணைய உலாவியாக Google Chrome ஐ கண்டு கொள்ள முடியும். இன்றோடு, Google Chrome வெளியாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. எளிமையான வகையில் பாதுகாப்பான வகையில் மிகவும் வேகமாக இணைய உலாவலைச் சாத்தியமாக்கும் தன்மையை Google Chrome கொண்டிருப்பதே அதிகளவில் பிரசித்தமடையக் காரணமெனலாம். Windows, Mac, Linux ஆகிய எல்லா பணிசெயல் முறைகளிலிலும் மிகவும் வேகமாக இயங்கக்கூடியது. இப்போது இது Flash ஐ கொண்ட நிலையிலேயே கிடைக்கப்பெறுகிறது. HTML5 இன் உயரிய விடயங்களை சாத்தியமாக்கும் தன்மைகளையும் இது கொண்டிருப்பது சுவை. இதில் பயன்படுத்தக்கூடிய வகையில், 6000 இற்கும் மேற்பட்ட பயனுள்ள நீட்டிப்புகளும் கிடைக்கப்பெறுகிறது.

Page 1 of 212