Posted : Aug - 31 - 2010 @ : 10:20 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றிலும், ஏன் உலகளவிலும் அதிகளவில் ஈர்ப்பைப் பெற்றதுதான் பராக் ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார உத்திகள். இந்தப் பிரச்சார வடிவமைப்பு இயக்குனரான ஸ்கொட் தோமஸ் மற்றும் ஏனைய பங்களிப்பாளர்கள் இணைந்து Designing Obama என்ற பிரச்சார உத்திகள் அடங்கிய நூலை வெளியிட்டிருக்கிறார்கள். 80 அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள இந்த நூலை நீங்கள் PDF ஆக, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Posted : Aug - 31 - 2010 @ : 5:47 pm | Filled under:
டிப்ஸ் |
No comments
Microsoft Word கொண்டுள்ள Spike வசதி பலருக்கும் தெரியாது. இந்த வசதி மூலம் உங்கள் Clipboard இற்கு Word ஆவணத்தில் பல இடங்களிலிருந்தும் Texts ஐ ஒரு நேரத்தில் Copy செய்து, ஒரு ஆவணத்தில் Paste செய்து கொள்ள முடியும்.
Posted : Aug - 31 - 2010 @ : 3:13 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
YouTube தளத்தில் யாருமே பார்க்காத (பூச்சியம் தடைவைகள் பார்க்கப்பட்ட!!!!) காணொளிகளை காட்சிப்படுத்துவற்காக ஒரு தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பெயரும் கூட Zero Views என்பதுதான். நீங்கள் தளத்தில் சென்று பார்வையிடும் போது, அந்த காணொளிகள் ஆயிரக்கணக்கில் பார்வையிடப்பட்டிருக்கும்.
Posted : Aug - 31 - 2010 @ : 2:49 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
1 comment
Gmail இல் மின்னஞ்சல்களை பகுத்தறிந்து முக்கியமான மின்னஞ்ல்களை முன்னுரிமைப்படுத்திக் காட்சிப்படுத்தும் சேவையை கூகிள் வழங்கவுள்ளது. Priority Inbox என்று வழங்கப்படும் இந்தச் சேவை எதிர்வரும் வாரத்தில் அனைத்து Gmail பயனர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
Posted : Aug - 31 - 2010 @ : 12:06 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
NASA வின், விண்வெளி ஆராய்ச்சி பற்றிய 50 வருடங்களுக்கு மேலான நிழற்படப் பதிவுகளை, Flickr உடன் சேர்ந்து பொதுமக்கள் பார்வைக்காக NASA வெளியிட்டுள்ளது. NASA Commons எனப் பெயர் கொண்டுள்ள Flickr கணக்கில் 50 வருட கால விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றிய நிலைகளை அனுபவிக்கலாம்.
Posted : Aug - 31 - 2010 @ : 12:01 am | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
HTML5 இன் சாத்தியங்களை காண்பிக்கும் நோக்கில் பல உயர்தரமாக வருவிளைகளைத் தரக்கூடிய பரிசோதனை முயற்சியை கூகிள் தயார் செய்து அண்மையில் வெளியாக்கியது. “The Wilderness Downtown” என பெயர் கொண்டு இப்பரிசோதனை வழங்கப்படுகிறது. Chrome இன் புதிய பதிப்பிருந்தால் நீங்களும் பரிசோதனையில் பங்கு பெறலாம்.
Posted : Aug - 30 - 2010 @ : 9:52 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
கூகிள் குரோம் பணிசெயல் முறைமையைக் கொண்ட நிலையில் இயங்கும் கையடக்க Tablet கணினிகளை எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி, கூகிள் வெளியிடவுள்ளது. அமெரிக்காவில் அதிகளவில் விற்பனை இடம்பெறும் நாளாக நவம்பர் 26 அமைவது போனஸ் தகவல்.
Posted : Aug - 30 - 2010 @ : 9:38 pm | Filled under:
நுட்பத் துணுக்குகள் |
No comments
சுருக்கமாக நுட்பங்கள் சார்ந்த செய்திகளைச் சுடச்சுட வழங்கும் நோக்கில், புதுநுட்பத்தில் இந்தப் புதுப்பகுதியை இணைக்கின்றோம். இதில் ஒவ்வொரு நாளும் இடம் பெறும் நுட்பங்கள் சார்ந்த செய்திகள் உங்கள் பார்வைக்கு சுடச்சுடவே வந்து சேரும். (ஊதி ஊதி வாசியுங்கள்.)
Posted : Aug - 08 - 2010 @ : 12:17 pm | Filled under:
செய்நிரல்கள் |
No comments
கமராக்களின் வியாபிப்பும், அதன் துல்லியமான படமெடுக்கும் திறனும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அண்மையில் வெளியான iPhone 4 கூட HD நிலையிலமைந்த வீடியோவை மிகவும் இயல்பாகவே எடுத்துவிடும் சாத்தியத்தை கொண்டிருக்கிறது. இவ்வாறான திறன்களைக் கொண்ட கமராக்கள் மூலம் நிழற்படங்களை எடுக்கின்ற பொழுது, அதன் அளவு மற்றும் துல்லியத் தன்மை மிகவும் உயர்ந்தளவில் காணப்படும்.